• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரம் கடலில் ஜல பிரதட்சணம் செய்த கருப்பையா எம்.எல்.ஏ.,

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக மாவட்ட கழக செயலாளர் எம்.வீ.கருப்பையா எம்.எல்.ஏ., ஜலப்பிரதோஷம் தியான யோகா பயிற்சி பெற்றவர்.

இதற்கு முன் அ.தி.மு.க. வில் இருந்த போதும் 2011 ல் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த காலங்களிலும் பல்வேறு முறை வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளிலும் திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலிலும் பல்வேறு வேண்டுதல்களுக்காக ஜல பிரதட்சண தியானம் செய்து உள்ளார்.

இந்நிலையில் தற்போது தாராபுரம் மதுராந்தகம்மதுராந்தகம் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதையொட்டி நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் எம். வீ.கருப்பையா எம்.எல்.ஏ.,ஜல பிரதட்சணம் செய்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.