• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

செம்புக்குடிபட்டி பள்ளியில் கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Jun 25, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று காலை பள்ளிக்கு வருகை தந்த எம்எல்ஏ வகுப்பறை உணவு தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கினார். மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார் காலை உணவு திட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பள்ளியில் தமிழக முதல்வரின் படத்தை திறந்து வைத்தார் நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் தாமு முல்லை சக்தி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.