மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சீனிவாச பெருமாள்ராஜ் என்ற பி.காம் பட்டாதாரி தனியார் கம்பெனியில் மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றிவரும்
இவர் மாற்றுத்திறனாளிகள், வறுமையில் உள்ளோர் உள்ளிட்டவர்களை கண்டு தன்னால் இயன்ற உதவிகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஆதரவற்ற, மாற்றுத்திறனாளிகள், வறுமையில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கண்டு அவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களின் சூழ்நிலையை பார்த்து தன்னால் இயன்ற உதவி செய்து வருகின்றறார்.,
இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில்
பாலமுருகன்-சிவகாமி தம்பதியின் இரண்டாவது மகள் உமாமகேஸ்வரி (21)
இவர் மாற்றுத்திறனாளியாக பிறந்தது முதல் இருந்து வருகிறார்.,இந்நிலையில் வீட்டிலே முடங்கி கிடப்பதாகவும், தாய் அல்லது பாட்டி என யாராவது உறவினர் உதவியுடன் இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும் கூறப்படுகிறது.,

உமாமகேஸ்வரியின் தாயார் சிவகாமி உசிலம்பட்டி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாகவும் இருப்பதற்கு வீடு இல்லாமல் தாயின் தகர வீட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.,
இதனை அறிந்த தன்னார்வ இளைஞர் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு வீல் சேர், மெத்தை, தலையணை, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை கொடுத்து உதவி செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.,

வீட்டிலே முடங்கி கிடந்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உதவிக்கரம் நீட்டிய செயலுக்கு தன்னார்வ இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.,





