• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்..,

ByKalamegam Viswanathan

Jul 7, 2026

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொது மக்கள் அவதியடைதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகே, அய்யமார் பொட்டல், வேப்பமரம் பஸ் ஸ்டாப், மார்கெட் ரோடு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இப் பகுதிகளில், சாலைகளில் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்துவதால், இப் பகுதி வழியாக பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் சாலையில் செல்ல நெரிசல் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகள் வரை சோழவந்தான் போலீஸார் , காலை , மாலை நேரங்களில் வந்து போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது வழக்கமாக இருந்தது.

தற்போது, ஷேர் ஆட்டோக்கள் பல சாலையில் நிறுத்தி பயணிகளை கூவி, கூவி அழைத்து சிட்டி பஸ்கள் போல பயணிகள் தொடர்ந்து ஏற்றி வருகின்றனராம்.
மதுரை அண்ணா நிலையம், கே.கே. நகர், அண்ணாநகர், கருப்பாயூரணி அப்பர் பள்ளி அருகேயும், மதுரை அப்போல்லோ மருத்துவமனை அருகேயும் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி ஆபத்தான பயணம் மேற் கொள்கின்றனராம்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் காவல் உயர் அதிகாரிகளுக்கு அவ்வப்போது புகார் அளித்தும் , மதுரையில் பெருகி வரும் ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆர்வம் காட்டவில்லையாம்.

மதுரை அண்ணாநகர் அப்போலோ பஸ்நிறுத்தம், பாண்டி கோயில் அருகே இரு சக்கர வாகனங்களை மடக்கி அடிக்கடி சோதணை செய்யும், மதுரை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், பெர்மிட் இன்றி, சாலை விதிகளை மீறும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை என புகார் அடிக்கடி எழுகிறது.
மதுரை காவல் ஆணையாளர், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி, போக்குவரத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?