

2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி விளையாடுகிறார். பிரேசில் வீரர் நெய்மர் தொடையில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக விளையாடவில்லை.
பிரேசில் அணி 12 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றி பெற்று கத்தார் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. அர்ஜென்டினா அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளை PSG கிளப் அணிக்காக விளையாடாமல் இருந்த மெஸ்ஸி தேசிய அணியில் விளையாட திரும்பியுள்ளார்.
இந்த ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
