

உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு துவக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த மருத்துவமனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க வந்ததாகவும், தினசரி 1300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைப்போல் சிறப்பான முதல் உதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பொதுமக்கள் அனைவரும் தரமான சிகிச்சை பெற்று வருகின்றனர். பணத்தை செலவு செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உதகை அரசு மருத்துவக் கல்லூரி மக்களின் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து மருத்துவ கல்லூரி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உரையாடினேன், அவர்களும் அனைத்து வசதிகளும் உள்ளது எனக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்ததாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

