• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

குமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழாஆண்டின் வளைவை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்..,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டின் வளைவை திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (பெப்ரவரி 24.25) தினங்களில் 4_ங்கு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின்
கன்னியாகுமரியில் முதல் நிகழ்வாக.

கன்னியாகுமரி கடற்பாறையில் உலகப்பொதுமறை தந்த ஐயன் திருவள்ளுவர் சிலை,புத்தாயிரம் ஆண்டான 2000_ த்தில். அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. சிலை நிறுவிய 25- ம் ஆண்டில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.86. கோடியில். திருவள்ளுவர் சிலை பாறை_ சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே ஆன கடற்பரப்பில் கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்தார்.

திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் வெள்ளி விழா ஆண்டான 2026 பெப்ரவரி 24- ம் நாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.ரூ.1 கோடியே 45_ லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அலங்கார நுழை வாயிலை இன்று (பெப்ரவரி 24)ம் நாள் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி வரும் வழியில் உள்ள பெருமாள் புரதத்தில் ரூபாய்.7 கோடியே,85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகளில்,ஒன்றை அடையாளமாக ‘ரிப்பன்’ வெட்டி திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா.இ.ஆ.ப., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், மாவட்ட அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற தலைவர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ்,தாரகை கத்பட், தமிழக உணவுத்துறை தலைவர் சுரேஷ் ராஜான், குமரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், வார்ட் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் கன்னியாகுமரி நகராட்சி 17 வந்து வார்ட் காங்கிரஸ் உறுப்பினர் ஆனி தாமஸ் முதல்வருக்கு ஐய்யன் திருவள்ளுவர் சிலையை விழாவின்
நினைவு பரிசாக வழங்கினார்.