முதல்வர் மு.க ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய் செல்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக மு.க ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளார்.
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது. தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
துபாயில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ‘வேர்ல்டு எக்ஸ்போ 2020’ சர்வதேச கண்காட்சி துவங்கியது. இக்கண்காட்சி 2022 மார்ச் 31 வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் இந்திய அரங்கில், மார்ச் 18 முதல் 24 வரை, தமிழக அரசு சார்பில், அரங்குகள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் பங்கேற்க உள்ளன. இதற்காக, கலாசார குழுவை சேர்ந்த 12 பேர், அரசு அலுவலர்கள் 10 பேர் கண்காட்சிக்கு செல்ல உள்ளனர்.அதற்காக, தமிழக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இந்த கண்காட்சியில் கலந்துக் கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய் செல்கிறார். துபாய் தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமையுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலீட்டை ஈர்க்க முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.