அ.தி.மு.க.சார்பாக குடிமைப்பணி தேர்வெழுதும் மாணவர்களுக்கு புத்தகத்தொகுப்பு மற்றும் கையேடுகள் வழங்கும் விழா மதுரை திருநகரில் நடைபெற்றது. அதில்பேசிய அவர் இன்றைய முதலமைச்சர் வாய்ச்சவடால் முதலமைச்சராக செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும்,திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பேசியபோது
அ.தி.மு.கவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக சமூக வலைத்தளத்தில் வானமே எல்லையாக கொண்டு ராஜ்சத்தியன்செயல்படுகிறார்.சமூகதளத்தில் அவரின்செயல்பாடுகள் எதிர்கட்சியினரின் வேட்டியை உருவும் விதமாக இருக்கிறது.மதுரையைமுன்மாதியாக கொண்டு மற்ற மாவட்டங்களிலும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்தவேண்டும். அ.தி.மு.க.சார்பாக குடிமைப்பணி தேர்வெழுதும் எழை மாணவர்களுக்கு புத்தகத்தொகுப்பு மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஏழை,மக்களுக்கு பக்கபலமாக இருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்பதை காட்டுகிறது.கொங்கு மண்டலத்தை எதிர்கட்சியினர் அசைத்து பார்த்தார்கள் அது முடியவில்லை.கொங்கு மண்டலம் எப்போதுமே அண்ணாதிராவிட முன்னேற்றக் கழக கோட்டைதான்.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெற்றிருப்பது போலியான வெற்றி.11 மாத தி.மு.க ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் மிகமோசமாக நடந்து கொண்டதால் மக்களுக்கு தி.மு.க அரசுமீது வெறுப்பு வந்திருக்கிறது.மிக எளியமனிதராக ,கொரோனா காலத்தில் மக்களுக்கு பக்கபலமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஆனால் இன்றைய முதலமைச்சர் வாய்ச்சவடால் முதலமைச்சராக செயல்படுகிறார்,சாயம் வெளுத்துவிட்டது.
‘ஆற்றல்’ ஐ .ஏ.எஸ் அகாடமியின் செயல்பாடுகள் பாராட்டுக்கள். அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை சமூகவலைத்தளத்தில் கொண்டுசேர்ப்பதில்மின்னல் வேகத்தில் ராஜ்சத்தியன் செயல்படுகிறார். தற்போது உள்ள இளைஞர்களின் வேகத்திற்கு நாங்கள் ஈடுகொடுக்கமுடியவில்லை.
ராஜ்சத்தியன் எடுத்துவரும் முயற்சிகள் மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் அரசை ஒ.பி.எஸ்,எடப்பாடியார் வழிகாட்டுதலோடு மீண்டும் அ.தி.மு.க அரசு அமைய வழிவகுக்கும். உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன் .இவ்வாறு பேசினார்.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ்,கோவை புறநகர் மாவட்டச்செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார்,மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், உசிலம்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க செயலாளர் வக்கீல் ரமேஷ்,திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர்முருகன்,திருப்பரங்குன்றம் மேற்கு பகுதி அ.தி.மு.க.செயலாளர் எஸ்.எம். பி. பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றியுரையாற்றினர்.இக்கூட்டத்திற்கு வரவேற்பாளர்களாக டி.கெளரிசங்கள்,மணிகண்டன்,கருப்பசாமி பாண்டியன்.எம்.தமிழ்ச்செல்வன் கலந்து கொள்கின்றனர்.மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ஆர்.கே.ஜே .மாணிக்கம்,ஜி.சிங்கராஜபாண்டியன்,கே.எம்.கோபி,எ.சரவணக்குமார்,ஆர்.பாண்டியராஜன்,கே.எம்.கருப்பசாமிபாண்டியன் ஆகியோரும் வரவேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.