• Mon. Dec 9th, 2024

காணாமல்போன விஷால்… தவிக்கும் கதாநாயகி ரிதுவர்மா…

விஷால் வினோத்குமார் எனும் அறிமுக இயக்குநர்இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நண்பர்களான நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 15 ஆம் தேதி லத்தி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி.விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்குவது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிப்பு எனிமி படத்தை தயாரித்ததன் மூலம் நஷ்டம் ஏற்பட்டது அதன் காரணமாக எனிமி பட தயாரிப்பாளர் வினோத் தயாரிப்பில் ஒரு படம் நடித்து தர கால்ஷீட் கொடுத்திருந்தார் நடிகர் விஷால்இப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு இருபதுநாட்கள் என்று திட்டமிட்டுபடப்பிடிப்பை தொடங்கினார்களாம். இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகை ரிதுவர்மா மும்பையில் இருந்துசென்னை வந்திருந்தார்.

இருபதுநாட்கள் என்று திட்டமிடப்பட்ட அப்படத்தின் படப்பிடிப்பு இரண்டுநாட்களோடு நின்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. காரணம், மூன்றாவதுநாளிலேயே தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டாராம் விஷால். இதனால் நாயகி ரிதுவர்மாவும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமுடியாமல் விடுதி அறையிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது.

அடுத்து என்ன? என்றால், வேறேன்ன? விஷால் எப்போது படப்பிடிப்புக்கு வருகிறாரோ அப்போது படப்பிடிப்பு தொடங்கும், அப்போது மற்ற நடிகர் நடிகைகளின் தேதிகளை வலுக்கட்டாயமாக வாங்கியாக வேண்டும் என்பதுதான் கஷ்டம் என்கிறது படக்குழு.