• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அம்மன் கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

சின்னமனூர் அம்மன் கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சூடம்மாள் அம்மன் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு இன்று நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கண்பட்டி பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ சூடம்மாள் அம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இத்திரு கோவிலில் திருவிழாவின் போது பல்வேறு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் இக்கோவிலில் வருடத்தில் சித்திரை மாதம் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய சூரிய பகவான் அம்மனை வணங்கும் அரிய நிகழ்வாக கருதப்படும் அம்மன் சிலை மீது சூரிய கதிர் விழும் நிகழ்வு இன்று நிகழ்ந்தது. இதில் சூரியனின் ஒளிக் கதிர்கள் அம்மனை வணங்கும் விதமாக சூலதில் உள்ள அம்மனின் சிலை மீது விழுந்து படிப்படியாக திருவடிகளில் வந்து விழுந்தது. சுமார் 15 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற இந்த நிகழ்வு பக்தர்கள் இடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. இந்த அரிய நிகழ்வை ஏரளமான பக்தர்கள் கண்டுகளித்து அம்மனை வணங்கி அம்மனின் அருள் பெற்று சென்றனர்.