• Sun. Oct 13th, 2024

சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானு..

Byகாயத்ரி

Feb 25, 2022

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்களை மீராபாய் சானு (வயது 27) தங்கப் பதக்கம் வென்றார்.

முதல் முறையாக 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். 167 கிலோ எடையை தூக்கிய ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெசிகா இண்டாவது இடத்தையும், மலேசியாவின் எல்லி காசந்திரா (165 கிலோ) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், புதிதாக சேர்க்கப்பட்ட 55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க மீராபாய் சானு தகுதி பெற்றுள்ளார். சானு தனது காமன்வெல்த் போட்டி தரவரிசையின் அடிப்படையில் ஏற்கனவே 49 கிலோ எடைப் பிரிவிலும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். எனினும், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க, சானு புதிய 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் இந்தியாவின் சங்கத் சாகர் (55 கிலோ எடைப்பிரிவு), ரிஷிகாந்த சிங் (55 கிலோ எடைப்பிரிவு), பிந்தியாராணி தேவி (59 கிலோ எடைப்பிரிவு) ஆகியோரும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தனர். பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியான சிங்கப்பூரி சர்வதேச போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்-வீராங்கனைகள் நேரடியாக காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *