• Mon. Jun 15th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மார்ச் மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கி செயல்படாது….

Byகாயத்ரி

Feb 25, 2022

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அட்டவணையை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் வேறுபாடும். அதாவது மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

அதில் மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தமாக 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கிறது. இந்த விடுமுறை நாட்களை அறிந்துகொண்டு வாடிக்கையாளர்கள் வங்கி பணிகளை முடித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை நாட்களில் ஆன்லைன் மூலம் வங்கி சேவைகள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம் சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.