• Tue. Feb 18th, 2025

குமரிக்கு வருகை தந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள்

குமரிக்கு முதல்வர், இரண்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சியர் முகாம் அலுவலகம் கன்னியாகுமரிக்கு மாற்றம்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆகியோரை வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இ.ஆ.ப, அவர்களுடன் வரவேற்பளித்த பின் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பாறையில் கட்டப்படும் கண்ணாடி பாலப்பணிகள் மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் பார்வையிட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களுடன் வட்டக்கோட்டை சுற்றுலா இடத்தையும் பார்வையிட்டார்.

உடன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் .பாபு,கன்னியாகுமரி பேரூராட்சி மன்ற தலைவர் கழக பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.