புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் புறவழிச்சலையில் பொத்தையம்பட்டி பிரிவு சாலை அருகில் கட்டியகாரன்பட்டி கருப்பையா சாலை விபத்தில் காயம் அடைந்து கிடந்தார், அந்த வழியாக பல்வேறு சுப நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அன்னவாசல் செல்லும் வழியில் விபத்தில் காயமடைந்த அந்த முதியோரை கண்ட முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் விசாரித்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஒன்றன்பின் ஒன்றாக மோதி கொண்டதில் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டதாக தெரிய வந்தது பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்களை தொடர்பு கொண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களை கேட்டுக் கொண்டார்.

முன்னாள் அமைச்சரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் தற்போது அவர் முதலுதவி செய்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.








