சிங்கப்பூர் நாட்டின் அமைச்சர் ஈஸ்வரன் கன்னியாகுமரி அருள்முகு பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
சிங்கப்பூர் நாட்டின் இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு ஈஸ்வரன் குடும்பத்துடன்.கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மனை தரிசனம் செய்தார்கள்.இவர்களது முன்னோர்கள் தமிழகத்தில் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும்.அமைச்சரின் முன்னோர்கள் மூன்று தலைமுறைக்கு முந்திய மூத்தவர்கள், சிங்கப்பூரில் குடி உரிமை பெற்றவர்கள் என்றும் சிங்கப்பூர் அரசின் முக்கிய துறைகளான நிதி துறைக்கு அடுத்த போக்குவரத்து துறையின் அமைச்சராக ஈஸ்வரன் இருக்கிறார்.செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மிக சரளமாக தமிழில் உரையாடினார்.ஒரு ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்தாது..
