• Sun. Mar 16th, 2025

அமைச்சர் இ.பெரியசாமி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி

ByVasanth Siddharthan

Mar 8, 2025

திண்டுக்கல் மாநகராட்சி பள்ளியில் ஏற்பட்ட விபத்தினால் காயமடைந்த மாணவர்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

திண்டுக்கல் பாரதி புரத்தில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் புனரமைப்பு செய்யாமல் இருந்து வந்த மாநகராட்சி பள்ளி கடந்த ஆண்டு புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனிடையே இன்று நான்காம் வகுப்பு வகுப்பறையில் கட்டிடத்தின் மேல் கூரை பெயர்ந்து விழுந்து ஐந்து மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது இதில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதைத் தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தற்பொழுது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது :-

காயமடைந்த மாணவர்கள் நலமுடன் இருப்பதாகவும் மேலும் இந்த விபத்திற்கு காரணம் என்னவென்று தீர விசாரணை செய்து தவறு நடந்திருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அவர்கள் மாநகராட்சி பள்ளிகளுக்காக பள்ளி கட்டிடங்கள் கட்டவும் பழைய கட்டிடங்களை பராமரிப்பு பணியை செய்யவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தரத்தைப் பற்றி புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி வராண்டங்கள் கல்லூரி வளாகம் போல் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வகை பள்ளிகளுக்கும் கட்டிடங்கள் கட்ட அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கூறினார். மேலும் இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.