முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் எஸ் ஆர் வி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

கூட்டத்தில் சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசும்போது:
முதல்வரின் வழிகாட்டுதலின்படி எல்லா அமைச்சர்களும் 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்படுகின்றனர். முன்னாடியெல்லாம் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இப்போது மக்களுக்காக பயந்து பயந்து ஒவ்வொரு விஷயமும் செய்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கு தேவையான செய்வோம் தேவையில்லாததை எடுத்து விடுவோம் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் டாஸ்மார்க்கை வைத்து நம்மளுக்கு எதுவும் தேவையில்லை. போதை பொருட்களை கண்ட்ரோல் செய்துள்ளோம். பள்ளியில் பயில்பவர்கள் கூல் லிப்,குட்கா போன்றவை பயன்படுத்தினார்கள் ஆனால் இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
5 வருடமாக கவுன்சிலர் வரவில்லை என்று சொல்கிறார்கள் நம்ம ஆட்சியில் அப்படி நடக்காது எம்எல்ஏவும் இங்கேதான் இருப்போம், அமைச்சரும் இங்கேதான் இருப்போம், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலரும் உங்க கூட தான் இருப்பார்.

இருப்பதிலேயே மிக மோசமாக வேலை செய்தது மதுரை கார்ப்பரேஷன் தான் 500 கோடி ஊழல் அடிச்சதாக சொல்கிறார்கள் அதெல்லாம் சாதாரணம். அதற்கு முன்னாடி எவ்வளவு இருக்கும்? மதுரை முழுவதும் கழிவுநீர் வெளியேற்றும் திட்டமில்லை. மாநகராட்சி கழிவு நீர் வெளியேற்றம், சாலை வசதி, குடிநீர் இந்த அடிப்படை வசதி கூட செய்யாதது எதற்கு மாநகராட்சி. கவுன்சிலர்கள் 10 கோடி 20 கோடி சம்பாரித்து நல்லா சந்தோஷமாக இருக்கிறார்கள் திமுக ஆட்சியில் மே ராஜினாமா செய்து அவரது கணவர் கைது செய்யப்பட்டு இதுக்கு மேல கேவலம் என்ன இருக்கு இதெல்லாம் திருடுவதற்கு அனுமதித்துள்ளீர்கள் அப்ப மக்களுக்கான என்ன பணி செய்தீர்கள் அது எல்லாம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் விரைவில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் வரும் இவர்களை வைத்து எந்த பயனும் இல்லை விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வோம் வரும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்காக பணியாற்றி இருக்கிறோம்.

சட்டமன்ற அலுவலகம் திறந்தாச்சு எப்போ எது வேண்டுமானாலும் சொல்லுங்கள் உங்களுக்கு பயந்து தான் வேலை செய்யப் போகிறோம் வேற யாருக்கும் இல்லை முன்னாடி போன்று எல்லாம் இருக்காது மூர்த்தி மதுரையில் எந்த மூர்த்தியும் இல்லை மக்கள்தான் உங்களுக்கு பயந்து தான் வேலை செய்வோம் வேறு யாருக்கும் பயந்து வேலை செய்ய மாட்டோம். மதுரையில் எந்த மூர்த்தியும் எந்த பி டி ஆரும் கிடையாது நீங்கள் தான் எங்கள் பிரதானம் அடுத்து வரும் தேர்தல்கள் சமூகமாக இருக்கும்.
மதுரையில் அனைத்து இடங்களிலும் கழிவு நிர்வாகிகள் அமைக்கப் பணி தொடங்க உள்ளோம் முதல்வர் வாயிலாக அந்த அறிவிப்பு வரும் வாரத்திற்கு மூன்று நாள் இங்கே தான் இருப்பேன் வெள்ளிக்கிழமை மதியமே வந்து விடுவேன் மூன்று நாட்கள் இங்கே தான் இருப்பேன் எதுனாலும் சொல்லுங்கள் நன்றி என்றார்.




