விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர் முத்து முருகன் தலைமையில் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பகுதியில் சட்டவிரோதமாக கனிம பொருட்கள் கடத்தப்படுகிறதா என இ.எல்.ரெட்டியாபட்டி பஸ் நிறுத்தத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது. ஏழாயிரம் பண்ணையில் இருந்து கோவில்பட்டி நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது டிரைவரிடம் எவ்வித அனுமதி சீட்டு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
உடனடியாக ஜல்லிக்கட்டு கொண்டிருந்த டிப்பர் லாரியை போலீஸ் ஸ்டேஷனில் முத்து முருகன் ஒப்படைத்து தலை மறைவான லாரியின் உரிமையாளர் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்







; ?>)
; ?>)
; ?>)