கட்டெறும்பு சேனல் ஸ்டாலின் சார்பில் போதை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி – வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விமல் பரிசுகள் வழங்கி செல்பி எடுத்துக் கொண்டார்.

போதைப் பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி தனியார் (கட்டெறும்பு) சேனல் சார்பில் மதுரை அருகே உள்ள உலகனேரியில் நடைபெற்றது.
மினிமாரத்தான் உலகனேரியில் இருந்து விவசாயக் கல்லூரி ரவுண்டானா வரை சென்று மீண்டும் உலகனேரியில் முடிவடைந்தது.
இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ,திரைப்பட நடிகர் விமல் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதையொட்டி, முக்கிய பகுதிகளில் ஒத்தக்கடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடிகர் விமல் கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டியுடன் கண்ணாடி அணிந்து குழந்தைகளுடன் செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டார். இதில், திரைப்பட நடிகர் ஜிகர்தண்டா காளையன் மற்றும் டாக்டர்.சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.








