• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குட விழா..,

ByKalamegam Viswanathan

May 30, 2026

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றத்தில் உள்ளது .

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வருவார் கோவிலில் உள்ள விசாக குரடு மண்டபத்தில் பக்தர்கள் நேற்று கடனாக கொண்டுவரப்பட்ட பால்குடங்களில் இருந்து சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் .

காலை ஆறு மணி முதல் மதுரை விருதுநகர் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குடம் வைபவ விழாவை முன்னிட்டு
ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி தேர் இழுத்து வந்தும் ஒரு சில பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள் .

திருப்பரங்குன்றம் அய்யா சி விசாக விழாவை முன்னிட்டு பல்லாயிரகனக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக திருக்கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குடிநீர் கழிவறை போன்ற வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.