• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எம்ஜிஆரின் அண்ணன் மகள் காலமானார்..!

Byகாயத்ரி

Nov 26, 2021

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானார்.
எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி.

இவர் கடந்த 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தன்னுடைய ஒரு சிறுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக இருந்தவர் தான் இந்த லீலாவதி.

37 ஆண்டுகள் ஒற்றை சிறுநீரகத்துடன் வாழ்ந்து வந்தவர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். இவரது மறைவிற்கு, பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.