புதுக்கோட்டையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேட்டுப்பட்டி JKN.செல்லையா MGR சார்பில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் துப்புறவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் சிப்காட் காலனி மக்களுக்கும் வேட்டி,சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் த.புஷ்பராஜ் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர விசுவாசிகளும், இளைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொங்கல் விழாவை முன்னிட்டு பலரும் பலருக்கும் உதவி செய்து வந்தாலும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் இவர்களுக்கெல்லாம் வேட்டி சேலை வழங்கி அவர்களை பெருமைப்படுத்துவது அரிதிலும் அரிதாக ஆங்காங்கே நடப்பது வழக்கம்.

இந்நிலையில் மேட்டுப்பட்டியில் வைத்து அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் புத்தாடைகள் வழங்கியது சிறப்புக்குரியதாக கருதி வழங்கியவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.





