• Thu. Mar 30th, 2023

பொங்கல் படங்களை ஓரங்கட்டிய எம்ஜிஆர், நடித்த நினைத்ததை முடிப்பவன்!..

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி எதுவாகினும் அது ரிலீஸ் படங்களோடு என்கிற அளவிற்கு தலைமுறை மாற்றம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா பிரச்சினைக்கு பின் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ரிலீஸ் படங்கள் என்கிற திட்டமிடல் தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டது. பண்டிகைகளை கொண்டாடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது.வலிமை, ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்கள் பொங்கல் ரேஸில் இருந்துஒதுங்கியதால்
அந்த படங்களால் தியேட்டர் கிடைக்காமல் காத்திருந்த பல படங்கள் , இந்த பொங்கலுக்கு வெளியாகியுள்ளன.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தாவிட்டால், தியேட்டர் கிடைக்காது என்கிற நிதர்சனத்தோடு அவர்கள் அந்த ரிஸ்க்கை எடுத்திருக்கிறார்கள். இன்னும் சில படங்கள், 50 சதவீதம் இருக்கை நிறைந்தாலே போதும் என்கிற மனநிலையில் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. அவற்றின் வசூல் என்ன? தேறுமா தேறாதா என்பதற்கு இல்லை என்பது தெரிந்துதான் படத்தை ரீலீஸ் செய்திருக்கிறார்கள் என்கிறது தியேட்டர் வட்டாரம்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், 47 ஆண்டுகளுக்குப் முன் வெளியாகி, அதன் பின் 100 முறைக்கு மேல் அடுத்தடுத்து திரையிடப்பட்ட எம்.ஜி.ஆர் நடித்து வெளியானநினைத்ததை முடிப்பவன் திரைப்படம் இன்றைய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்குகளில் அவ்வப்போது திரையிடப்படுகிறது.மதுரை நகரத்தின் மையப்பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கிறது சென்ட்ரல்சினிமா மதுரையில் 75 ஆண்டுகளை கடந்து எஞ்சி நிற்கும் ஒரே திரையரங்கு இதுமட்டுமே இங்கு புதிய படங்கள் திரையிடப்படுவது இல்லை பழைய படங்கள்தான் திரையிடப்படுகின்றன மதுரையில் சிவாஜி கணேஷன் படம் திரையிடப்படும் தியேட்டர் என்கிற பெயர் பெற்றது பட்டிக்காடா பட்டணமா 100 நாட்களை கடந்து ஓடிய திரையரங்கம் இன்றைக்கு சிறுபட தயாரிப்பாளர்களுக்கும், ஷிப்டிங் படம் திரையிடும் விநியோகஸ்தர்களுக்கும் அபாயம் அளிக்கும் திரையரங்காக உள்ளது பொங்கலை முன்னிட்டு நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டு உள்ளது பொங்கல் அன்று வெளியான கோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகர்கள் நடித்த படங்களுக்கு மூன்று இலக்கத்தில் டிக்கட் விற்பனை ஆவதே அதிசயமாக இருந்த நிலையில் நினைத்ததை முடிப்பவன்முதல் நாள் மொத்த வசூல் 25,000 ரூபாய் ஆகியுள்ளது போட்டி போட்டு டிவி சேனல்கள் புதிய படங்களை திரையிட்டன, ஓடிடியில் புதிய படங்கள்ஆனால் இவை அனைத்தையும் கடந்து முதல் நாளில் 25 ஆயிரம் ரூபாய் வசூல் பார்த்துள்ளது நினைத்ததை முடிப்பவன் திரைப்படம். முதல்நாள் மாலை காட்சியில் மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வசூல் ஆகியுள்ளது அந்த படத்திற்கு.

மதுரையில் எம்.ஜி.ஆர்க்கு என்று ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இப்போதும் இருக்கிறது. இவர்கள் கட்சி சாராதவர்கள். ஆனால் எம்.ஜி.ஆர்படங்களை விரும்பி பார்ப்பவர்கள். 47 ஆண்டுகளுக்கு முன் வெளியான படத்தை இன்றும் பார்க்கிறார்கள்பிற தியேட்டர்களைப் போன்று சென்ட்ரல் தியேட்டரில் டிக்கெட் விலை அதிகமில்லை. 40 ரூபாய் தான் டிக்கெட் விலை அப்படி பார்க்கும் போது, முதல்நாள் வசூலை ஒப்பிடும் போது, சுமார் 650 பேர் நினைத்ததை முடிப்பவன் படத்தை பார்த்துள்ளனர். அதாவது ஒரு காட்சிக்கு 160 பேர் வீதம் சராசரியாக அந்தபடத்தை பார்த்துள்ளனர். இது பிற படங்களின் வசூல் கணக்குடன் ஒப்பிடுகிறபோது சாதாரணமான விஷயமாக தெரியும் பொங்கல் அன்று வெளியான நாய் சேகர், கொம்புவச்ச சிங்கம், தேள், கார்பன், என்ன சொல்லப்போகிறாய் படங்கள் அனைத்தும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, பிரம்மாண்டமான விளம்பரங்கள் செய்யப்பட்ட படங்கள் வெளியான முதல் நாள் முதல் காட்சிக்கு படம் பார்க்க மக்கள் வராததால் பல இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதை கேட்கும்போது 47 வருடங்கள் மூன்று தலைமுறை கடந்தும் நினைத்ததை முடிப்பவன் படத்தை முதல் காட்சியில் 160 பேர் பார்த்தது சாதனைதானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *