• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மெகா ஸ்டார் மம்முட்டியை விடாத கொரோனா

பிரபல மலையாள நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஏராளமான பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “ தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்ட போதிலும், எனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் உள்ளது.
நான் நன்றாகவே இருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நான் வீட்டில்தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க விழைகிறேன். எல்லா நேரத்திலும் முகக்கவசம் அணியுங்கள். கவனமாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.