• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவுநாள்

முன்னாள் முதலமைச்சர் ,அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவுதினத்தை முன்னிட்டு பாவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக முழுவதும் எம்ஜிஆர் நினைவு தினம் அதிமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவுநாள் முன்னிட்டு எஸ்.ஆர்.டி.நகர் முன்பு சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி தலைமையில் அதிமுகவினர் மெளன ஊர்வலமாக சென்றனர். புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, சசி பிரபு, நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி முன்னாள் எம்.எல்.ஏ ஏ.டி.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி (நல்லூர்) ஜெயமணி கனேசன் (விண்ணபள்ளி) நாகேந்திரன்(பனையம்பள்ளி), மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், வாத்தியார் துரைசாமி,அதிமுக நிர்வாகிகள் மயில்சாமி, கே.ஜி.சதீஷ்,ஜெபஸ், பொன்னுசாமி, வெங்கிடுசாமி,மகளிர் அணி நிர்வாகி.தமிழ்செல்வி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.