• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

டிஜிட்டல் அவதாரம் எடுக்கும் எம்.ஜி.ஆர் படம்

ByA.Tamilselvan

Nov 30, 2022

புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம் 48 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி. லட்சுமணன் தயாரிப்பில் 1974ம் ஆண்டு எஸ்.எஸ். பாலன் இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிரித்து வாழ வேண்டும்’. இப்படம் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
சமீபகாலமாக எம்ஜிஆரின் பல படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றம் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. நான் ஏன் பிறந்தேன், ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாகாரன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நவம்பர் 30, 1974ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம் விரைவில்- டிஜிட்டலில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் பாடும் ‘ ஒன்றே சொல்வான், நன்றே செய்வான்…’ எனும் அந்த பாடல் மிகவும் பிரபலமான பாடல். படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்களும் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தன. அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை மீண்டும் 48 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிஜிட்டலில் மெருகேற்றியுள்ளனர். ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.