மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவின் இருபிரிவு தலைவர்களான இபிஎஸ்,ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி காலை 10.30 மணிக்கு அங்கு வந்தார். அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார். அப்போது தொண்டர்கள் அவரை வரவேற்று கோஷமிட்டனர். எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக வந்து மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு உள்ள மேடையில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உறுதி மொழி எடுத்தார். அவரை வரவேற்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ்,ஓபிஎஸ் மரியாதை
