• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நாளை மாரத்தானை முன்னிட்டு மெட்ரோ ரயில் சிறப்பு அறிவிப்பு..!

Byவிஷா

Jan 5, 2024

சென்னையில் நாளை (ஜனவரி 6) நடைபெறும் மாரத்தானை முன்னிட்டு, மெட்ரோ ரயில் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
சென்னை மாரத்தான் ஓட்டம் நாளை சனிக்கிழமை அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், வருகின்ற 06.01.2024 அன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறப்பு க்யூஆர் குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த க்யூஆர் குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.
வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் 4 பிரிவுகளாக ஜனவரி 6-ஆம் தேதி (நாளை) அதிகாலை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. மெரீனா நேப்பியர் பாலம், பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளி ஆகிய இடங்களில் இருந்து தொடங்கும் மாரத்தான் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை செல்கிறது.