• Mon. Apr 29th, 2024

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு..!

Byவிஷா

Jan 5, 2024

போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்து தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த சமயத்தில், பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் ஜனவரி 9ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும்.
வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும் என்றும் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் எனவும் என வலியுறுத்தியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *