ட்விட்டருக்கு போட்டியாக இறங்கியுள்ள, மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் லோகோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
திரெட்ஸ் ஆப்பில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரொஃபைலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த த்ரெட்ஸ் செயலி 7 மணி நேரத்தில் 1 மில்லியன் பயனர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் சேட்ஜிபிடி 5 நாட்களில் 1 மில்லியன் பயனர்களை கடந்திருந்த நிலையில், அந்த சாதனையை த்ரெட்ஸ் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம் 2.5 மாதங்கள், ஸ்பாட்டிஃபை 5 மாதங்கள், ஃபேஸ்புக் 10 மாதங்களில் 1 மில்லியன் பயனர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் லோகோ, இந்திய மொழிகளின் எழுத்து போல் உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். சிலர் அதை, தமிழ் எழுத்து ‘கு’ என்றும், சிலர் மலையாள எழுத்து ‘த்ரா’ என்றும், சிலர் ‘ஓம்’ அடையாள குறி என்றும் கூறுகின்றனர். சிலர் ஒருபடி மேலே சென்று அந்த லோகோவை, ஜிலேபி படத்துடன் ஒப்பிட்டு கேலி செய்து ட்வீட் செய்துள்ளனர்.