• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய தேசிய லீக் சார்பாக கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Byதரணி

Dec 22, 2022

கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்திய தேசிய லீக் தமிழ்நாடு கிளை சார்பாக வாழத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் கிருஸ்துமஸ் பண்டிகை வரும் 25 தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1மாதமாக உலகமுழுவதும் கிருஸ்மஸ் பண்டிகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்திலும் கிருஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கி உள்ளது.இதன் ஒருபகுதியாக இந்திய தேசிய லீக் தமிழ்நாடுகிளையின் சார்பாக அதன் செயலாளர் இ.செய்யது ஜஹாங்கீர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் சிவகாசி இராக்லாந்து ஞாபகார்த்த ஆலயத்தின் தலைமை குரு டேவிட்சன்,உதவிகுரு தவராஜ் ஆகியோரை ஆலயத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயபால்,இமானுவேல்,கிருஸ்துமஸ் தாத்தா,இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் கராத்தே அக்பர்,முஹம்மதுகான்,முத்துவிலாசா,முஹம்மதுகாசிம்,காதர்ஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.