• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை

ByA.Tamilselvan

Dec 22, 2022

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கும் பணி மீண்டும் தொடக்கம்.
சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா திரிபு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதே போல இந்தியாவில் BF.7 ஒமிக்ரான் வகை வைரஸ் 7 நபருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.உருமாறிய கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். இதன்படி மத்திய சுகாதார துறை ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றன.