• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தலையில் கல்லை போட்டு கூலித்தொழிலாளி கொலை!

By

Sep 12, 2021 ,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு-கனகபுரம் சாலைக்கு இடைப்பட்ட காட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த போலீசார் தோட்டத்தில் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இறந்தவர் சென்னிமலை அடுத்த ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், அவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இந்த கொலை குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.