• Thu. Mar 30th, 2023

115 ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல் – ஒருவர் கைது

By

Sep 12, 2021 ,

மதுராந்தகம் அருகே தனியார் கோழிப் பண்ணையில் கோழி தீவனத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அன்சர் புட் கோழிப் பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசியை வேகவைத்து கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் ஏடிஜிபி பாஸ் குமார் உத்தரவின்பேரில் அங்கு சென்ற குற்றப்புலனாய்வு போலீசார் கோழி பண்ணையில் சோதனை செய்ததில் கோழி தீவனத்திற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5750 கிலோ மூட்டைகள் பறிமுதல் செய்தனர். அதை பதுக்கி வைத்திருந்ததாக மதுரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர் அப்துல் சமத் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *