• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள்..,

விருதுநகர் மாவட்டம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் திரு.ஆ.நாகராசன் அவர்களின் ஆணைக்கிணங்க ஏற்பாடு செய்திருந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்,

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், K.S.சண்முகக்கனி அவர்கள் தலைமையில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் நகர கழக செயலாளர் திரு.M.S.K.இளங்ககோவன்,சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக கிளை செயலாளர்கள்,வழக்கறிஞர்கள் மற்றும் ஆதித்தமிழர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்காக ஏற்பாடுகளை ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மணிமாறன் ,சாத்தூர் ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.