”மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக”
திறன் மேம்பாட்டு மையம் மற்றும் உணவகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மதுரை மாநகராட்சி, சென்னை மிஷின் மற்றும் செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனம் இணைந்து அறிஞர் அண்ணா மாளிகை வளாகம் மற்றும் ஜான்சிராணி பூங்காவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் உணவகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், மேயர் இந்திராணி பொன்வசந்த், முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர்.
ராமசுப்பிரமணியன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் உணவகம் மாற்றுத் திறனாளிகளுக்கான குறிப்பாக மனநோய் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏற்படுத்தப் படுகிறது.
சென்னை மிஷின் நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய நபர்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி மற்றும் பேக்கரி தயாரிப்பு முறைகள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் பல கல்வி மற்றும் தொழில்சார்ந்த நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிற்றுண்டி மற்றும் கேன்டீன்கள் மூலம் பலநூறு மாற்றுத்
திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் உயர்த்தப் பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்காக இந்த உணவகம் ஏற்படுத்தப் படுகிறது. மேலும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து ஹேப்பி ஸ்கூலிங் என்ற திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மது மற்றும் போதை அடிமையாக உள்ளவர்களுக்கு தொடர்ந்து இலவச சிகிச்சை நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
எம்.எஸ்.செல்லமுத்து நிறுவனத்தின் சார்பில் மனநல குன்றியயோர் மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியாக உணவு தயாரித்தல், சேவை மற்றும் விருந்தோம்பல், செயல்முறை, அமைப்புகள், சிறந்த நடைமுறைகள் உள்ளிட்ட பயற்சிகள் அளிக்கப்படுகிறது. சென்னை மிஷன் அனுபவம் வாய்ந்த சமையல்காரர்கள் மற்றும் மேற்பார்வை யாளர்களை நியமிக்கும், அவர்கள் திட்ட பயனாளிகளுக்கு பயிற்சியாளர் களாகவும் பணியாற்றுவார்கள். வரும் ஜீலை இறுதி வாரத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உணவகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் பாபு, துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர். ராமசுப்பிரமணியன், இயக்குநர்கள் ஜனார்தன்பாபு, செல்வமணி, சென்னை மிஷின் அறக்கட்டளை நிறுவனர்
மகாதேவன், மேற்பார்வையாளர் சுப்பிரமணியம் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.