தமிழ்நாட்டு முதலமைச்சர் விளம்பர வெளிச்சத்தில் தான் தன்னுடைய அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரைக்கு முதலமைச்சர் செல்லும் சாலைகள் மட்டும் கண்ணைப் பறிக்கும் வகையில் பளிச்சு பளிச்சென செப்பனிடப்படுகிறது. மக்கள் செல்லும் பாதை குண்டு குழியுமாக காணப்படுகிறது.

சாக்கடையை கூட தூர்வார முடியாமல் அதிகாரிகள் போர்வை போர்த்து ஸ்கிரீன் போட்டு மறைத்து உள்ளார்கள். முதலமைச்சர் வரும்போது கூட அந்த சாக்கடைக்கு தீர்வு கிடைக்குமா என மதுரை மக்கள் ஏங்கி கிடக்கும் போது அதுவும் கூட விடிவுகாலம் இல்லாத போல போர்வை போர்த்தி மறைத்துள்ளார்கள்.
நாடக கம்பெனிகள் நடத்துகிற இரட்டை வேடத்தை முற்றுப்புள்ளி வைக்கிற வகையில் 2026 தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக அமர்வதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி,
கழக நிரந்தர பொது செயலாளர் ஐயா எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை கிராம அன்னதான விழா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவையின் சார்பில் 100 நாட்களில் 100 திருக்கோயிலில் 100 நாட்கள் சிறப்பு பிரார்த்தனையோடு கிராம அன்னதான திருவிழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கங்குளம் கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் கிராம அன்னதானத் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கி துவக்கி வைத்தார்.
கழக நிரந்தர பொது செயலாளர் ஐயா எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை கிராம அன்னதான விழா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவையின் சார்பில் இன்று திருமங்கலம் தொகுதி புங்கங்குளம் கிராமத்தில் மாபெரும் கிராம அன்னதான விழா நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட அன்னதான திருவிழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறுசுவை அன்னதானத்தை துவக்கி வைத்து வழங்கினார் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜவர்மன் மாணிக்கம் மாநில நிர்வாகி வெற்றிவேல் புளியங்குளம் ராமகிருஷ்ணன் மாவட்ட அவைத் தலைவர் முருகன் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி முன்னாள் யூனியன் சேர்மன் லதா ஜெகன் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சரவண பாண்டியன் கபிகாசிமாயன் உஷா சுந்தரம் சிவசக்தி ஒன்றிய பொருளாளர் சாமிநாதன் பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் முத்துராஜா வெங்கடேஷ் சிவரக்கோட்டை ஆதிராஜா உச்சப்பட்டி செல்வம் விஜி திரளிமல்லிகா பாபு கண்ணபிரான் ஜெயமணி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 நாள் கோவில்களில் சிறப்பு பூஜை முன்னிட்டு புங்கங்குளம் அருள்மிகு அம்மன் திருக்கோவிலில் மலர் தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் கழக நிர்வாகிகளுக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
இதற்கிடையே புங்கங்குளம் சாத்தங்குடி சித்தாலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு பொன்னாடை அணிவித்து விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.
அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து வழங்கி சிறப்புரையாற்றிதாவது,
தமிழ்நாட்டு முதலமைச்சர் விளம்பர வெளிச்சத்தில் தான் தன்னுடைய அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நன்றாக அறிவோம். ஆகவே தான் எந்த ஊருக்கு சென்றாலும் இயற்கை மழைக்கு இணையாக செயற்கை மழையா என்று கேட்கும் அளவிற்கு இயற்கையாக மக்கள் திரண்டு வந்து முதலமைச்சர் வருகிறார் திருமுகத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை மழை என்கின்ற போது செயற்கை மழை கொடுக்கிற போது இங்கே என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை இயற்கை எதிராக முதலமைச்சர் அவர்கள் மதுரைக்கு வருவது வருத்தமில்லை. அவர் செல்லும் சாலைகள் மட்டும் கண்ணை பறிக்கும் வகையில் பளிச்சு பளிச்சென செப்பனிடப்படுகிறது. மக்கள் செல்லும் பாதை குண்டு குழியுமாக காணப்படுகிறது. பந்தல்குடியில் சாக்கடையை கூட தூர்வார முடியாமல் அதிகாரிகள் அதை போர்வை போர்த்து கிரீன் போட்டு மறைத்துள்ளார்கள்.
முதலமைச்சர் கண்ணில் பட்டுவிட்டால் சாக்கடையை ஏன் சரி செய்யவில்லை என அவர் கேட்பாரா மக்கள் கேட்பார்களா என்று நமக்கு புரியவில்லை. மக்கள் கேட்டு பார்த்து அலுத்து விட்டார்கள் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை முதலமைச்சர்கள் வரும்போது கூட அந்த சாக்கடைக்கு தீர்வு கிடைக்குமா என மதுரை மக்கள் ஏங்கி கிடக்கும் போது அதுவும் கூட விடிவுகாலம் இல்லாத போல போர்வை போர்த்தி மறைத்துள்ளார்கள்.
இந்த கூத்துக்கெல்லாம் மதுரை மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள் இதை எல்லாம் நாடக கம்பெனிகள் நடத்துகிற இரட்டை வேடத்தை முற்றுப்புள்ளி வைக்கிற வகையில் 2026 தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சர் அரியணையில் அமருவதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும் என சிறப்பு உரையாற்றுகிறார்.