சோழவந்தான் அருகே திருவேடகத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மதுரை புறநகர் மேற்குமாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை வகித்தார். திருவேடகம் கிளைச் செயலாளர் சி பி ஆர் மணி முன்னிலை வகித்தார். முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றி உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்.
இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கப்பாண்டி ராமலிங்கம், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக் குமார், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல் துரை தன்ராஜ் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா மகளிர் அணி செயலாளர் லட்சுமி மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சவர்ணம் முன்னாள் சேர்மன் முருகேசன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், வசந்தி கணேசன், நிர்வாகிகள் இளைஞர் அணி நகர செயலாளர்.கேபிள் மணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..