

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி பணிகளின் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் மாவட்ட திட்டகுழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி சேர்மன் அதிமுகவின் மாவட்ட ஊராட்சி திட்டகுழு தலைவர் வசந்திமான்ராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மாவட்ட திட்டகுழு உறுப்பினர்களான சுபாஷினி, மாவட்ட கவுன்சிலர்கள் வேல்ராணி வெங்கடேஷ், .கணேசன், நர்மதா ஜெயக்குமார் ஆகியோர் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வெற்றிச்சான்றிதழ்களை கொடுத்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
