• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெகா தடுப்பூசி முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ByA.Tamilselvan

Sep 4, 2022

தமிழக முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
முகாமை பார்வையிட்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது.. இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி இன்று 35-வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.
பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள தகுதி உடையவர்களில் சுமார் 15 சதவீதம் பேர்தான் போட்டுள்ளார்கள். பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகிறேன். இந்த மாதம் மட்டும் தான் இலவசமாக போடப்படும். பொதுமக்கள் வசதிக்காக இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் அதாவது 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இந்த முகாம்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் வழக்கம் போல் தினமும் தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.