மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
பாண்டிய மன்னர்களின் படை சேனாதிபதிகளாக விளங்கிய தானப்ப பிள்ளை- அழகப்பா பிள்ளை குடும்பத்தை கெளரவப்படுத்தும் விதமாக மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பரிகார மூர்த்திகளுடன் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மாசி வீதியில் வந்து தெற்கு வாசல் வழியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளுவர் பின்னர் மாலை பூஜைகளுக்கு பின் மீண்டும் மாசி வீதிகள் வழியாக சாமி ஊர்வலமாக அம்மன் சன்னதி சென்றடையும்.