ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தில் கடந்த 1ஆம் தேதி மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளதாக தகவல் வந்ததையடுத்து ஆனைமலை தாலுகா செயலாளர் பரமசிவம் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு இச்சம்பவம் குறித்து விசாரிக்க கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகனகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் மலைவாழ் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.