• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம் – முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

ByKalamegam Viswanathan

Jan 17, 2024

சோழவந்தான் அருகே நகரி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழனி பாதயாத்திரை செல்லும் மக்களுக்காக கடந்த 14ஆம் தேதி முதல் அம்மா கிட்சன் சார்பில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பாதயாத்திரை பக்தர்களின் சிரமம் போக்க அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்து பொருட்கள் வழங்கும் நிகழ்வும் தொடர்ந்து நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்பி உதயகுமார் எம்எல்ஏ மருந்து மாத்திரைகள் வழங்கினார் டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்பையா மாணிக்கம் சரவணன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன் வாடிப்பட்டி வடக்கு காளிதாஸ் மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா பேட்டை முத்துக்குமார் டிரைவர் மணி மற்றும் அதிமுக மதுரை பொன்னகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அம்மா பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.