• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்த மேயர் மகேஷ்…

வலம்புரிவிளை குப்பை மலையை மேயர் மகேஷ், சுத்திகரிப்பு வாகனம் மூலம் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் வலம்புரி விளை உரக்கிடங்கில் தனியார் வாகனம் மூலம் பெறப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதற்கான HDFC வங்கியின் உதவியுடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில், பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்பு குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.

உடன் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், HDFC வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.