• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிவகாசி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகங்களை மேயர் வழங்கினார்…..

ByKalamegam Viswanathan

Jun 14, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணாமலை நாடார் – உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும்
விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள், புத்தகப்பை மற்றும் காலணி உள்ளிட்டவைகளை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் வழங்கினார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை மேயர் விக்னேஷ்பிரியா, பள்ளிக் கல்விக்குழு தலைவர் ஸ்ரீனிகா, 4ம் மண்டல தலைவர் சூர்யாசந்திரன், மாமன்ற உறுப்பினர் சசிகலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.