• Tue. Mar 25th, 2025

திமுகவின் உண்ணாநிலை போராட்டம் வெல்லட்டும்.., டுவிட்டரில் வாழ்த்து கூறிய சு.வெங்கடேசன் எம்.பி..!

Byவிஷா

Aug 24, 2023
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி மத்திய அரசு மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.  ஆனால் அதிமுக மாநாடு மதுரையில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற நிலையில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் கருதி மதுரையில் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு,  23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரை மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞர்- மாணவர்- மருத்துவர் அணிகள் இன்று மதுரையில் நடத்தும் உண்ணாநிலை போராட்டம் வெல்லட்டும். மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் கையெழுத்தை பகிர்கிறேன். இந்தக்கனவை குலைத்த துரோகிகளை மக்கள் வீழ்த்துவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.