• Fri. Sep 29th, 2023

நீட்டுக்கு எதிரான திமுகவின் உண்ணாவிரதம் – ஏமாற்று நாடகம்… ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்பது போல் திமுகவால் நீட்டை ரத்து செய்ய முடியாது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

மதுரையில் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் விருதை வழங்கியதை முன்னிட்டு, ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான் 3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகளை  வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸில் நடைபெற்றது.

 இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி  கேக் வெட்டி இனிப்புகளை ஆட்டோ தொழிலாளர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

 இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. தமிழரசன், எம்.வி.கருப்பையா, மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன்  ஒன்றிய கழக செயலாளர் கொரியர் கணேசன்,ராமசாமி, அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, நகர செயலாளர் பூமா ராஜா, செல்லம்பட்டி ரகு  திடீர்நகர் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,

தமிழக மக்களுக்கு பல்வேறு புரட்சிகரமாக திட்டங்களை தந்ததால் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்த பட்டத்தை வழங்கிய மதுரை மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிலவில் சந்திரயான் 1யை மயில்சாமி என்ற தமிழர் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2யை வனிதா என்ற தமிழர் அனுப்பினார். தற்போது சந்திரயான் 3யை நிலவில்  அனுப்பிவெற்றி பெற்றுள்ளது அதை விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழர் வீர முத்துவேல் அனுப்பி இன்றைக்கு உலக பெருமையை இந்தியாவிற்கு கிடைக்க செய்துஉள்ளார்.

 நிலவின் தென் துருவம் ஆபத்தான பகுதியாகும் அதை சாதித்து காட்டியது நமக்கு பெருமையாகும் . அதனைத் தொடர்ந்து புரட்சித் தமிழர் எடப்பாடியார் இதற்கு வாழ்த்து தெரிவித்து  இனிப்புகளை வழங்கினார். தற்போது அவரின் ஆணைக்கிணங்க தற்போது கேக் வெட்டி இனிப்புகளை வழங்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் நீட்டை ரத்து செய்யும் கையெழுத்தை  போடுவோம் என்று சொல்லி பச்சை பொய் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.

 இதே எடப்பாடியார் காலத்தில் அரசு பள்ளி  ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பெறவேண்டும் என்று 7.5 சகவீத இட ஒதுக்கீட்டை  பெற்றுக் கொடுத்தார் .மேலும் தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று தந்தார்.  ஆனால் இன்றைக்கு திமுக பச்சை பொய் பேசுவதை வாழ்க்கையாகவும், அரசியல் கடமையாகவும் கூறி வருகிறது.

கறந்த பால் மடிபுகாது ,கருவாடு மீனாகாது, காகித பூ மணக்கத் என்பது போல் திமுக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

 நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி உள்ளனர், தற்போது ராகுல் பிரதமர் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார் அது தான்  ரகசியம் கூறுகிறார்கள். கடல் வற்றி ,மீன் கருவாடாகி, அதை சாப்பிட நினைக்கும் காத்திருக்கும் கொக்கு குடல் வற்றி போய் இறந்ததாம் அந்த கதையை போல் போல், ராகுல் என்றைக்கு பிரதமராக வருவது,  நீட்டை எப்போது ரத்து செய்வது. இப்படி பச்சைபொய் பேசுவது ஏமாற்று நாடாகும் இதில் துளி கூட உண்மை இல்லை.

மீனவருக்காக மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதுவது என்பதுகண்ணாமூச்சி நாடகம்.கட்சதீவை மீட்பதில் ஸ்டாலின் அக்கறை காக்க வேண்டும். ஏனென்றால் கட்சி தீவை தாரை வார்த்து கொடுத்து திமுக செய்த பாவம்தான்.  

சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா கச்சத்தீவு குறித்து பேசும்போதெல்லாம், திமுக வேப்பங்காய் கசப்பது போல வெளிநடப்பு செய்வார்கள்.

 கச்சத்தீவை  மத்திய, மாநில அரசுகள் மீட்கவேண்டுமென்று எடப்பாடியார் தலைமையில் மாநாட்டில் தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

அனைத்து குடும்பங்களுக்கும் தாய்மார்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள் .ஆனால் இந்த  திட்டத்திற்கு என்ன  பட்டம், பெயர் கூட சூட்டிக் கொள்ளட்டும் ஆனால், அனைத்து தாய்மார்களுக்கும் உரிமை தொகையை வழங்க வேண்டும் இதுதான் எடப்பாடியாரின் கோரிக்கை, இதை கூட மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *