இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் அதிமுக கொடிகம்பத்தில் உள்ள கொடியை அகற்றி செருப்பை ஏற்றி சென்றுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டிபட்டி அருகே உள்ள கடமலைகுண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூத்து கிராமத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் அதிமுக கொடிகம்பத்தில் உள்ள கொடியை அகற்றி செருப்பை ஏற்றி சென்றுள்ளனர்.பொழுது விடிந்து பார்த்த போது கொடிகம்பத்தில் செருப்பு கட்டியிருப்பதை பார்த்து ஊர்மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து கடமலைகுண்டு ஆய்வாளர் குமரேசன் மற்றும் துணை சார்பு ஆய்வாளர் லதா கொடிகம்பத்தில் உள்ள செருப்பை அகற்றினர்.
அப்பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து கீழே வீசபட்ட கொடியை கைப்பற்றி மீண்டும் கொடியை ஏற்றினார்.அதிமுக கட்சிகாரர்கள் மர்மநபர்களை பிடிக்குமாறு வாக்குவாதம் செய்து ஆரவாரம் செய்தனர்.பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிபடையில் கலைந்து சென்றனர் .இதனால் பாலூத்து பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.