• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது 10ம் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் விழாக்கள் எடுக்கப்படுவது வழக்கம். ஏழாம் திருவிழா ஆண்டத்தம்மன் கோவில் தெரு மறவர் சமுதாயம் சார்பில் பூ சப்பரதில் அம்பாள் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்கள் காட்சியளிப்பார். அதன்படி நேற்று நள்ளிரவில் அலங்கரிக்கப்பட்ட பூ சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

முன்னதாக நள்ளிரவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாடினர். விழா ஏற்பாடுகளை ஆண்டு அம்மன் கோவில் நாட்டாமை கதிர்வேல் செயலாளர் குருநாதன் பொருளாளர் ராஜா உள்ளிட்ட ஊர் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.